சரத்குமார் – அசோக் செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’.

இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட், இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், புலனாய்வு திரில்லர் திரைப்படம் ‘போர் தொழில்’ . அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

‘போர் தொழில்’ திரைப்படத்தின் டைட்டிலையும், பிரத்யேகமான காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும். என உறுதி அளிக்கின்றனர், படக்குழுவினர்.