ராணுவ வீரராக பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’!

பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும் படத்திற்கு ‘ஃபௌசி’ (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், பிரபாஸூடன் பிரபாஸ், இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர் நடிக்கவிருக்கின்றனர். ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் சார்பில் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக  உருவாகவிருக்கிறது.

‘ஃபௌசி’ (Fauzi) எனும் தலைப்பு, இப்படத்தில் பிரபாஸ் ராணுவ வீரராக நடிக்கவிருப்பதால், அந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில், கதை அமைந்துள்ளதாம்.

பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், பிரபாஸ் உருவத்தின் பின்னணியில் சமஸ்கிருத சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளது. தற்கான விளக்கம் பார்த்தா (அர்ஜுனன்) போல பத்மவ்யூஹத்தை வென்றவர், கர்ணன் போல வீரத்துடன் இருந்தாலும் பாண்டவர்களின் பக்கத்தில் நிற்பவர், ஏகலைவன் போல குருவின்றி பிறந்த இயற்கை வீரன் எனக் கூறுகின்றன. அவர் ஒரு பிராமணனின் ஞானத்தையும், ஒரு சத்திரியனின் தர்மத்தையும் இணைத்து நிற்பவர் — இதுவே நாயக கதாப்பாத்திரத்தின் உண்மையான குணம். என்று கூறப்படுகிறது. அதோடு  “A Battalion Who Walks Alone”எனும் டேக்லைன், ரசிகர்களிடம் மேலும் ‘ஃபௌசி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியுள்ளது.

பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி ( Imanvi ) நடிக்கிறார். ‘ஃபௌசி’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது.