நடிகர் பிரசாந்துடன் தேவயானியின் இளைய மகள் நடிக்கிறார்!

பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த, ‘டாப் ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகர் பிரசாந்தின் 53வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் .இயக்குனர்கள் கே.எஸ். ரவிகுமார், வெற்றிமாறன், பட அதிபர் கலைப்புலி எஸ். தாணு, தேவயானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அவரது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ’ரஞ்சன்’ தி அட்வகேட். எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரசாந்தின் அப்பா, நடிகர் தியாகராஜன் இயக்குகிறார்.

’ரஞ்சன்’ தி அட்வகேட்.  படத்தில், தேவயானியின் இளைய மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி – உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரசாந்த் ரஞ்சன் எனும் வழக்கறிஞராக நடித்து வருகிறார் .மேலும் இப்படத்தில் பத்திரிகையாளர் கோடங்கியின் மகன் சந்தோஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கில் பிரியதர்ஷி புள்ளிகொண்டா நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற ‘கோர்ட் – ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நடிகர் இயக்குனர் தியாகராஜன் ரஞ்சன் என்ற பெயரில் இப்படத்தை தமிழில் இயக்குகிறார். தெலுங்கில் வெறும் 5 கோடி ரூபாயில் உருவான கோர்ட் திரைப்படம் 58 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.சாந்தி தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.