PVR  நிறுவனம் வெளியிடும் ‘காலேஜ் ரோடு’!

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த் உள்ளிட்ட  பல படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ .  இவருடன் மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட்  பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ், மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும்  ,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது, என்பதை பற்றி பேசுகிற படமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாகவும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம். என்கிறார், இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங். இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித்.

டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘காலேஜ்’ரோடு’ படத்தினை,  PVR  நிறுவனத்தினர், வெளியீடு செய்கிறார்கள்.