இராவண கோட்டம் – தென்மாவட்ட அரசியல்! – நடிகர் ஷாந்தனு!

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி தயாரிப்பில், மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.  மே 12 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

நாயகனாக ஷாந்தனு நடிக்க, நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்

இராவண கோட்டம் படம் குறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறியதாவது..,

“இராவண கோட்டம்”.  வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளது. நிச்சயமாக ஒரு அனுபவத்தை கொடுக்கும். ரசிகர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பும் காட்சிகள் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு.. மிகப்பெரும் பாரத்தைத் தலையில் அவர் ஏற்றிக் கொண்டார். அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்லும் படைப்பாக இருக்கும்.  கதைக்களத்திற்கு தகுந்த இளைஞனாக வலம் வந்து இருக்கிறார். ஷாந்தனுக்கு கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும். என்றார்.

நடிகர் ஷாந்தனு பேசியதாவது,

இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பாளர் கண்ணன், என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பாரோ, அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.

இராவண கோட்டம் படம், சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை, மிகவும் சிரமப்பட்டேன்.

இராவண கோட்டம் படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன். எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர்.  இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும். என்றார்.