ஷாஹித் கபூர் – விஜய் சேதுபதி  நடிப்பில் ராஜ் & DK யின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் !

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது  . மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர் , மற்றும் இது  பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும்  ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

2023— பிரைம் வீடியோ,  புதிய ஆண்டை ஒரு மிகப்பெரிய ஆரவாரத்துடன் தொடங்கும் வகையில், ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த தனது ஒரிஜினல், ஃபார்ஸி,  தொடரை பிப்ரவரி 10 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படுவதை இன்று அறிவித்தது.

இந்தத் தொடரில் ராஷி கண்ணா,  தேர்ந்த கலைஞரான கே கே மேனன், திரைக்குத் மீண்டும் திரும்பும் மூத்த நடிகர் அமோல் பலேகர், ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகர் புவன் அரோராவும்  முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது  எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.  செல்வந்தர்களுக்கு  ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு  பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக்  கலைஞனை  சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது . அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான  ஒரு விறுவிறுப்பான  தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி  ஐ எழுதியுள்ளனர்.

இரட்டையர்களான ராஜ் & டிகே கூறுகையில்,

“தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்! இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும்,  இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது  பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட  ஏற்ற தாழ்வுகளினூடே பயனித்துப்  படமாக்கியுள்ளோம். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது. தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கும்  இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.” . . என்றார்.