சென்னையில் இயங்கிவரும் பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளிகளின் தாளாளரும் பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் தாயாருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 93.
திருமதி. ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் சென்னை திநகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அவரது இறுதி சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் நடைபெறும்.