ரஜினி – கமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பு!

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் த செ ஞானவேல் , ரஜினிகாந்த்தின் 170 வது படத்தினை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, சாலிகிராமத்தில் நடந்து வருகிறது. ரஜினியின் படப்பிடிப்பு நடந்து வரும் அதே பகுதியில், கமல்ஹாசன் நடிப்பினில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் படத்தின் படபிடிப்பும் நடந்து வருகிறது. ரஜினி, கமல் இருவரும் அருகருகே படப்பிடிப்பில் இருந்ததை அறிந்த அவர்கள், படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொண்டனர். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து கொள்வது, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்திருக்கிறது. இதனால் ரஜினி கமல் இருவரும் உற்சாகமாக காணப்பட்டனர்.