ஜெயிலர் 2-வில் தமன்னா ஏன் இல்லை? நெல்சனிடம் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்த்!

Rajinikanth’s Witty Statement to Nelson About Tamannaah and Bangalore Goes Viral

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாகக் களம் இறங்கும் ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படம் வரும் அக்டோபர் 15, 2026 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் பெரும்  எதிர்பார்ப்புக்கு மத்தியில், வழக்கமான ஆடியோ லான்ச் நிகழ்வுகளுக்குப் பதிலாக, சன் டிவி (Sun TV) நடத்திய பிரத்யேக ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ (Jailer 2 Super Show) என்ற 3 மணி நேர நேர்காணல் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெருகி வருகிறது. இந்த விசேஷ முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் இயக்குநர் நெல்சனுக்கும் இடையே நடந்த சுவாரசியமான மற்றும் நக்கலான உரையாடல்கள் தற்போது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும், இணையதள வாசிகளையும் ரசிக்க வைத்துள்ளது

அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்,

முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடல் மூலம் உலகையே ஆட வைத்த நடிகை தமன்னா ஏன் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்று நெல்சனிடம் ஜாலியாகக் கேள்வி எழுப்பினார். அதற்குத் தனது வழக்கமான நக்கல் பாணியில் பதிலளித்த இயக்குநர் நெல்சன், “சார், நீங்க ஆசைப்படுறீங்க அல்லது உங்களுக்குப் பிடிச்சிருக்குன்றதுக்காகவே நாங்க சும்மா ஒரு பாட்டைத் திரைக்கதைக்கு நடுவுல திணிக்க முடியாது சார்!” என்று ஓப்பனாகக் கூறினார். இதைக் கேட்டுச் சிரித்த ரஜினிகாந்த், உடனே தனக்கே உரிய மாஸ் பாணியில், “யோவ்! எனக்குப் பிடிச்சிருக்குன்னு நான் எப்பப்பா சொன்னேன்? நான் ரசிகர்களுக்காகக் கேட்டேன். ஒருவேளை என் வாழ்க்கையில எனக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டும்தான் நான் செய்வேன்னு பிடிவாதம் பிடிச்சிருந்தா, இந்நேரம் நான் சினிமாவிலிருந்து அவுட் ஆகி பெங்களூருக்கே ஓடியிருப்பேன்! ரசிகர்கள் எதை விரும்புறாங்களோ அதைச் செய்றதால தான் நான் இன்னைக்கும் இந்த ஃபீல்டுல நின்னுட்டு இருக்கேன்!” என்று மாஸான கவுண்டரைக் கொடுத்து நெல்சனையும், பார்வையாளர்களையும் அதிர வைத்தார்.

மேலும், நெல்சன் திரையுலகில் பல கஷ்டங்களைத் தாண்டி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதை மனதாரப் பாராட்டிய ரஜினி, அண்மையில் நெல்சன் கடற்கரை நோக்கி அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட 18-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பைப் புதிதாக வாங்கியுள்ளதாகவும், அவரது சொகுசான வாழ்க்கை முறையைப் பார்த்துத் தமக்கே பொறாமையாக இருப்பதாகக் கிண்டலடித்து, இருவருக்குள் இருக்கும் அன்யோன்ய நட்பை வெளிப்படுத்தினார். இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சி நகைச்சுவை, கலாட்டா கொண்டாட்டமாக இருந்தது.

அக்டோபர் 15 ரிலீஸை முன்னிட்டுத் தொடங்கப்பட்டுள்ள ‘ஜெயிலர் 2’ முன்பதிவுகள் (Advance Bookings) பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகின்றன. சென்னையில் மட்டும் தற்போதைய நிலவரப்படி ரூ. 1.66 கோடிக்கு மேல் அட்வான்ஸ் புக்கிங் வசூல் செய்துள்ள இப்படம், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் ரூ. 5.32 கோடியையும், உலக அளவில் ரூ. 20 கோடியையும் தாண்டி வசூல் வேட்டையை இப்போதே தொடங்கியுள்ளது. 6 AM, 9 AM சிறப்புத் காட்சிகளுடன் தியேட்டர்களைத் திருவிழாக் கோலமாக மாற்ற ரஜினி ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பாலாபிஷேகங்களுடன் மாபெரும் கொண்டாட்டத்திற்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.