பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.