‘ராமாயணா’ படத்தின் பிரத்யேக முன்னோட்டத்தைக் கண்டுகளித்த நடிகர் யஷின் குழந்தைகள்!

Rocking Star Yash Starrer Epic Ramayana Movie Preview Screened Specially For Kids Ayra And Yatharv In Los Angeles

பிரபல தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட தயாரிப்பில், இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இதிகாசப் படைப்பு ‘ராமாயணா’. நமித் மல்ஹோத்ராவின் ‘பிரைம் ஃபோகஸ்’ (Prime Focus) நிறுவனத்துடன் இணைந்து, ‘ராக்கிங் ஸ்டார்’ யஷின் ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ (Monster Mind Creations) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ராவணன் என்ற மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படத்தின் மிக பிரத்யேகமான முன்னோட்டத் திரையிடல் (Exclusive Preview) நடைபெற்றது. இதனை நடிகர் யஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டித் தம்பதியினரின் குழந்தைகளான ஏழு வயது மகள் ஐரா மற்றும் இன்று [30 Oct, 2026] தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் மகன் யதர்வ் ஆகிய இருவருக்கும் ‘ராமாயணா’ திரைப்படம் ஒரு மறக்க முடியாத சிறப்பான அனுபவமாகவும், வாழ்நாளின் உன்னத நினைவாகவும் மாறியுள்ளது.

நடிகர் யஷின் ஒட்டுமொத்தத் திரைப்பயணத்திலும் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் இந்த பிரம்மாண்டமான இதிகாசத் திரைப்படத்தை, அவரது குழந்தைகளே திரையில் முதலில் பார்த்திருப்பது ஒட்டுமொத்தப் படக்குழுவினரிடையேயும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

இதனிடையே, நடிகர் யஷ் தனது குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரசியமான காரணங்களையும், அதன் அர்த்தங்களையும் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, மகள் ‘ஐரா’ என்ற பெயர், செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ‘ஐராவதி’ என்பதிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும். அதேபோல், மகன் ‘யதர்வ்’ என்ற பெயருக்கு ‘முழுமையானவன்’ என்று பொருள். மேலும், தங்களது குடும்ப உறுப்பினர்களான யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களின் எழுத்துக்களைத் துல்லியமாக ஒன்றிணைத்தே ‘யதர்வ்’ என்ற பெயரைத் தாங்கள் தேர்வு செய்ததாக ராதிகா பண்டித் தெரிவித்துள்ளார். தற்போது ‘ராமாயணா’ திரைப்படம் அவர்களது நினைவுகளில் ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், இந்த உன்னத இதிகாசத்திற்கும் யஷின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் இடையே ஒரு அழகான புதிய தொடர்பு உருவாகியுள்ளது எனத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.