‘டன்ஹிண்டா’ நீர்வீழ்ச்சியில் ஆடிப்பாடும் ராம் சரண், ஜான்வி கபூர்!

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில்,  கிராமிய பின்னணியில் உருவாகிவரும் ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இத்திரைப்படத்தை, ‘விருத்தி சினிமாஸ் ‘ (Vriddhi Cinemas)  சார்பில், வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்குகின்றனர்.

இந்நிலையில், ‘பெத்தி’ படக்குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு, டன்ஹிண்டா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட, பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடனமாடும், A.R. ரஹ்மான் இசையமைப்பில் உருவான பாடலுக்காக, படக்காட்சியை, படம் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளனர். R ரத்னவேலு, ஒளிப்பதிவு செய்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் ‘பெத்தி’ திரைப்படம், வரும்  2026 மார்ச் மாதம்  27 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘பெத்தி’ திரைப்படத்தில்,  சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.