பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.
செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது…” எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி, இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைபடங்கள் பார்த்து மகிழலாம்.”என்றார்
நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது…”மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்பொது தான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும்”என்றார்.
நடிகை பூர்ணிமா ரவி கூறியதாவது…
இது எனது முதல் திரைப்படம். படப்பிடிப்பு அனுபவங்கள் முழுதுமே எனக்கு புதிதாக இருந்தது. என்னை மிகவும் ஆதராவாக கவனித்துகொண்ட படக்குழு அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எனது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது.., இது மற்ற படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தங்கை பாத்திரமாக இருக்கும் என உறுதியளித்தார். என்னை கனிவாக கவனித்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி”என்றார் .
நடிகர் பாலசரவணன் கூறியதாவது…”நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல் தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ தொட்டே, தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்தற்கு ரியோ ராஜுக்கு நன்றி. குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்றார் .
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…” இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார்.”என்றார் .
ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ,படத்தொகுப்பாளர் சாம் ,நடிகர் சித்தார்த் விபின் ,கலை இயக்குநர் சரவணன்,பாடலாசிரியர் நிரஞ்சனா பாரதி, தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.