‘காந்தாரா’ நடிகர் ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்!

காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான  வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.

ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்‌ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக  பிரார்த்தனை செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை அவரின் இந்த ஆன்மீகப் பயணம், பக்தி, நன்றியுணர்வு மற்றும்  நம் மரபை போற்றும் வெளிப்பாடாக திகழ்கிறது — இது காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் பிரதிபலிக்கும் அதே ஆன்மீக சாரத்தையும் இந்தப்பயணம் வெளிப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் இருந்து இப்படத்தின் மீது காட்டப்படும் அன்புக்கும் ஆதரவுக்கும் காந்தாரா குழுவினர் பெரும் மகிழச்சியோடு, இந்தச் சினிமாவை ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாக மாற்றியதற்கு, மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறார்கள்.