ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும், ‘சிங்கப்பூர் சலூன்’ ஆர்ஜே பாலாஜி!

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து, ஐசரி கே கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், எல்கேஜி  மற்றும் மூக்குத்தி அம்மன். மக்களிடையே எளிதில் சென்றடைந்த இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன.

இந்தப் படங்களை தொடர்ந்து, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பினில் வெளியாகும் மூன்றாவது படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படமும் மக்களிடையே எளிதில் சென்றடையும், என்கின்றனர் படக்குழுவினர்.

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தினை, ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியிருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும், இப்படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷென் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன், ஒரு பிரபலமான நடிகரும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது!

‘சிங்கப்பூர் சலூன் படத்தில் 60 சதவிகித காமெடியுடன் 40 சதவிகித எமோஷனல் இருக்கும்.’ என்கிறார், படத்தின் இயக்குநர் கோகுல்.

மேலும், அவர் இது குறித்து கூறும் போது…

‘இதுவரை, நான் இயக்கிய படங்களில் எனக்கு, ஒரு ஆத்ம திருப்தியையை கொடுத்தது சிங்கப்பூர் சலூன் படம் தான். எல்லா வயதினருக்கும் ஏற்றபடியான, ரசிகர்கள் இந்தப்படத்தில் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள்’.

‘என்னோட வாழ்க்கையில பார்த்த, பல  முடி திருத்துபவர்கள் தான், இந்த கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன். ஐடி துறையைப்போல், இன்டீரியர் டெக்கரேஷன் கொண்ட சலூன்கள் பல வந்துவிட்டன. தங்களை அழகு படுத்திக்கொள்ள, எல்லா பெரிய நடிகர்களும்  அவர்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அழகுக்கலை சார்ந்த  இந்தத் தொழில், ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த கருத்தை மய்யமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்!’ என்றார்.

சிங்கப்பூர் சலூன் படம் குறித்து, ஆர்.ஜே பாலாஜி  பேசியதாவது..,

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், நான் நடித்து வெளியான எல்கேஜி  மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றன. இந்தப்படமும் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் படம் இது தான். மக்களுக்கு தேவையான கமர்ஷியலுடன் எமோஷனாலகவும் தங்களை கனெக்ட் செய்து கொள்ளச்செய்யும் திரைக்கதை தான் படத்தின் பலமாக இருக்கும். சலூன் என்றவுடன் எல்லோருக்கும் இதில் அரசியல் இருக்கிறதா? சமூக கருத்துக்கள் இருக்கிறதா? என கேள்விகள் வரும்! இருக்கிறது, ஆனால் மேலோட்டமாக அது இருக்கும். அரசியல் பேசாத இந்த படம் ,  மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்.’ என்கிறார்.

சிங்கப்பூர் சலூன் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி,  ‘ரெட்ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.