‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ மற்றும் ‘ஐவா என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ ‘ராம் in லீலா’. என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தொடக்க விழாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் in லீலா ‘ எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படம் – சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது.