வெற்றிமாறன் – தனுஷ் இணையும் புதிய படத்தினை தயாரிக்கும் ‘RS இன்ஃபோடெயின்மென்ட்’!

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை, விடுதலை பகுதி 2 ஆகிய படங்களின் வெற்றிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன்  இயக்கும் 9 வது படத்தினை ‘RS இன்ஃபோடெயின்மென்ட்’ தயாரிக்க உள்ளது. இதில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவிருக்கிறது.

அதைத்தொடர்ந்து, ‘RS இன்ஃபோடெயின்மென்ட்’ மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிக்கும் படத்தினையும் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநர் வெற்றிமாறனின் முக்கிய உதவியாளர்களில் முக்கியமானவர். ‘விடுதலை’ தொடரின் வெற்றிக்கு இவரது பங்கு முக்கியமானது என்கிறார் வெற்றிமாறன். மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

வெற்றிக்கூட்டணியினர் ஒன்றிணையும் இந்த படங்களுக்கு, ரசிகர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.