கௌதம் கார்த்தி நடிக்கும் , ‘ROOT – Running Out Of Time’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

Verus Productions நிறுவனம், ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லர் திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தினை, சூரியபிரதாப் எஸ் இயக்குகிறார். இவர், , ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம்  சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்திலும் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அது குறித்து இயக்குனர் சூரியபிரதாப் .எஸ்  கூறியதாவது..,

“முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவிற்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது. கௌதம் – அபர்ஷக்தி இணைந்து தோன்றும் காட்சிகள் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். சென்னை நகரின் பரபரப்பான பின்னணி இந்த படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதில் மேலும் அதிரடி காட்சிகளும், ரசிகர்களுக்கான பல அசத்தலான ஆச்சரியங்களும் சேர்க்கபடவுள்ளதாம்.