சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது! 

‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்த்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பை,  அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த  அதிரடி- பீரியட் – ஆக்சன் திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம்” என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு #SDT18 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.