‘அருவி’ மற்றும் ‘வாழ்க்கை’ படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் டீசர் ப்ரோமோ, ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. 2 நிமிட 15 வினாடிகள் கொண்ட இந்த டீசர் ப்ரோமோவில், கதாநாயகனின் இயல்பைப் பற்றியும், மற்ற கதாபாத்திரங்களுடனான தொடர்பு குறித்தும் பேசப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் அமைதியான, அழுத்தமான உணர்வுகள் மூலம், சக்தித் திருமகன், அரசியல் படங்களில் ரசிகர்களிடம் சிறப்பான கவனத்தை பெறும் என நம்பப்படுகிறது.
சக்தித் திருமகன் படத்தின் கூர்மையான கதை சொல்லல், உயர் தொழில்நுட்ப நேர்த்தி, ஷெல்லி காலிஸ்ட்டின் வசீகரிக்கும் காட்சிகள், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் கூர்மையான எடிட்டிங் ஆகியவற்றுடன், டீசர் ப்ரோமோ , ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ தயாரித்த இந்தப் படத்தில், விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன், கிரண், ரினி பாட், ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் சக்தித் திருமகன், ஒரு சிறந்த சினிமா அனுபவமாக தயாராகி வருகிறது.