பழங்குடி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு” முகாம்

சாக்யா அறக்கட்டளையின் சார்பில் “பழங்குடி குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு” முகாம் நேற்று (16.02.2020) தென்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு எழுது பொருட்களை சாக்யா அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சே. செந்திலிங்கம் வழங்கினார்.

அறக்கட்டளையின் அறங்காவலர் சிராஜ், சமூக ஆர்வலர்கள் முனைவர் பிரசன்னா, முனைவர் ராஜசேகர், கள ஒருங்கிணைப்பாளர்கள் ராமமூர்த்தி, குணாளன் மற்றும் தமிழக கட்டுநாயக்க பழங்குடியின கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் சிவா, சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.