R.மாதேஷ் சண்டக்காரி படத்தை வெற்றிப்படமாக கொடுப்பாரா?

விமல், ஸ்ரேயா ஜோடி சேரும் ‘சண்டகாரி’

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்   & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘சண்டகாரி’. விமல் கதாநாயகனாக நடிக்க நீண்ட நாட்கள் வாய்ப்பின்றி நடிக்காமலிருந்த ஸ்ரேயா அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பிரபு , சத்யன்,  கே.ஆர், விஜயா, ரேகா, உமா பத்மநாபன் ஆகியோர் நடித்துள்ளனர்.  மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் வில்லனாக நடிக்கிறார்.

ஆர்.மாதேஷ் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் . மலையாளத்தில்  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தின் தழுவல் தான் ‘சண்டகாரி’. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு  நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்ததுள்ளது.

‘சண்டக்காரி’ படத்தைப் பற்றி இயக்குனர்  மாதேஷ்  கூறியதாவது…

‘வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது… தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குனர் R.மாதேஷ்..

மிகப்பெரும் எதிர்பார்ப்பில், த்ரிஷா நடிப்பில் வெளியாகி படு தோல்வியடைந்த ‘மோகினி’ படத்தை இயக்கிய R.மாதேஷ் சண்டக்காரி படத்தை வெற்றிப்படமாக கொடுப்பாரா?