Sareeram Movie Review
சரீரம், இத்திரைப்படத்தை ‘G.V.P. PICTURES’ சார்பில், G.V. பெருமாள் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார். இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் தர்ஷன், சார்மி இருவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா நடித்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் G.V. பெருமாள் நடித்திருக்கிறார்.
இசையமைத்திருக்கிறார், V.T. பாரதிராஜா. டோர்னலா பாஸ்கர் K, பரணி குமார் இருவரும் ஒளிப்பதிவினை செய்துள்ளனர்.
புதுப்பேட்டை சுரேஷ், கிரானைட் குவாரி உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர். அவரது ஒரே மகள், சார்மி. கல்லூரியில் படித்துவரும் சார்மி, உடன் படித்து வரும் தர்ஷனை காதலித்து வருகிறார். இந்தக்காதல் சார்மியின் முறை மாமனுக்கு தெரியவ்ருகிறது. இதனால், அவர் கடும் கோபம் கொள்கிறார். அதோடு சார்மியின் வீட்டார் முறை மாமனுக்கு மணமுடிக்க முடிவு செய்கின்றனர். அதோடு, தர்ஷனை கொலை செய்யவும் திட்டமிடுகின்றனர்.
இந்நிலையில், தர்ஷனும் சார்மியும் தங்களது பாலினத்தை மாற்றிக்கொண்டு வாழ முடிவு செய்கின்றனர். ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், சரீரம் படத்தின் கதை.
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத, வித்தியாசமான கதையை சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். அதற்காக, அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வித்தியாசமான கதையை, திரைக்கதையாக சொல்வதில் தான் அவர் தோற்றுப்போயிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, தொழில் முறையற்ற படமாக்கல், அப்பட்டமாக தெரிகிறது. எடிட்டிங், சண்டைப்பயிற்சி, நடிப்பு, நடனம், இசையமைப்பு என எல்லாவற்றிலும் நேர்த்தியற்ற ஆக்கம்!
வெற்றிபெறக்கூடிய நல்ல கதையம்சம், அழகான நாயகன், நாயகி அவர்களை வைத்துக்கொண்டு ஒரு நல்ல படத்தினை கொடுப்பதில் கோட்டை விட்டுள்ளார், இயக்குநர் G.V. பெருமாள்.
வித்தியாசமான கதையை யோசித்த இயக்குநர் G.V. பெருமாளுக்கு மீண்டும் ஒரு பாராட்டுக்கள்!