தமிழகத்தின் பல இடங்களில் ‘சர்கார்’ காட்சிகள் ரத்து!

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இப்படத்தில் இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்துவது மாதிரியான காட்சிக்கு அதிமுகவினர் இடையே கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு 2வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் சர்கார் படத்தின் காலை காட்சிகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலவச பொருட்களுக்கு எதிரான காட்சியை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என்று அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியுள்ள சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய அனைத்து காட்சிகளையும் இன்றே நீக்குவதாக படத்தை வெளியிட்ட ‘ஶ்ரீ தேணான்டாள் மூவிஸ்’ முரளி உறுதியளித்துள்ளார். எனவே இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் என நம்பப்படுகிறது.