சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன்!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில்  உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தவிர்க்கமுடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் உலக நாயகனின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் குழுவினர்.