திரைத்துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு உதவும் ‘சசிகலா’ தயாரிப்பு நிறுவனம்!

“Freedom of Film making ”  எனும் தாராக மந்திரத்துடன் திரைத்துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு,   ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம்.  

இந் நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் என அனைத்து வகையினருக்கும் உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.        

‘சசிகலா’ தயாரிப்பு நிறுவனத்தில் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் உள்ளடக்கியது இந்நிறுவனத்தின் சிறப்பு. இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரடக்‌ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான  உதவிகளையும் ,சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது.என்கிறார், இதன் நிர்வாக இயக்குநர்.

‘சசிகலா’ தயாரிப்பு நிறுவனத்தை பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்த  படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.