தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை வாய்ந்தவர் சசிகுமார். தற்போது, TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’நிறுவனம் தயாரித்து, இயக்குனர் சத்திய சிவாவின் இயக்கியிருக்கும் ‘நான் மிருகமாய் மாற’திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது குறித்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கூறியதாவது…
ஒரு சாதாரண மனிதன், சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான். என்பதே ‘நான் மிருகமாய் மாற’ படத்தின் கதை. இப்படத்தில், சவுண்ட் இஞ்சினியராக நடித்திருக்கிறேன். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதை இப்படத்தின் திருப்புமுனையாக , இயக்குனர் சத்ய சிவா அழகாக படமாக்கியிருக்கிறார்.
‘நான் மிருகமாய் மாற’திரைப்படத்தில் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். எனக்கும் நடிகர் விக்ராந்துக்கும் சண்டை காட்சிகள் இருக்கிறது.
‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘வாராயோ வெண்ணிலாவே’ ஆகிய படங்களில் நடித்த, ஹரிப்ரியா படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு
கணவன் மற்றும் குழந்தையை பராமறிக்கும் ஒரு எதார்த்தமான குடும்பத்தலைவியாக நடித்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் போன்ற ஒரு இதிகாசப்படத்தினை விரைவில் இயக்க இருக்கிறேன் அதற்கான முதல் கட்டப்பணியினை துவங்கியிருக்கிறேன். ‘ஈசன்’ படத்திற்கு பிறகு இந்தப்படத்தை வடிவமைத்தேன். பட்ஜெட் பெரிய அளவில் தேவைப்படுவதால் அப்போது எடுக்க முயற்சி செய்யவில்லை. தற்போது அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. விரைவில் இந்தப்படம் குறித்த செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என்று தெரிவித்தார்.
‘நான் மிருகமாய் மாற’திரைப்படத்தில், படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை! ஆனால் பின்னணி இசை மூலம் மிரட்டியிருக்கிறாராம், இசையமைப்பாளர் ஜிப்ரான். ராஜா பட்டச் சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது..