‘செகண்ட் கேஸ் ஆப் ‘சீதாராம்’ – விமர்சனம்!

‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’. இத்திரைப்படத்தினை தேவிபிரசாத் ஷெட்டி – சாத்விக் ஹெப்பார், இருவரும் அரவிந்த்  ஷெட்டியுடன் இணைந்து தயாரித்துள்ளனர்.  ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ வழங்கியுள்ளது. எழுதி, இயக்கியிருக்கிறார், தேவிபிரசாத் ஷெட்டி. இதில், விஜய ராகவேந்திரா, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே,  உஷா பண்டாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்ச்சியாக, துன்புறுத்தப்பட்டு பலர் கொலை செய்யப்படுகிறார்கள். கொடூரமான ஒரு சைக்கோவினால மட்டுமே இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்படும். என போஸ்ட்மார்ட்டம் செய்ய்யும் டாக்டர் அதிர்ச்சியுடனும், பீதியுஅடனும் போலீஸூக்கு தெரிவிக்கிறார். மிரண்டு போகும் போலீஸ், கொலையாளியை தேடுகிறது. ஒரே மாதிரியாக நடக்கும் இந்த கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பணி காவல்துறை அதிகாரியான நாயகன் விஜய ராகவேந்திராவுக்கு கொடுக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்தாரா, கொலைக்கு என்ன காரணம்? இது தான், ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’.

நாயகன் விஜய ராகவேந்திரா, கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் நடிப்பில் குறையில்லை. அவரது உடல் மொழி சிறப்பாக இருக்கிறது. தடயங்கள் இன்றி கொலையாளியைப் பின் தொடரும் யுத்தி சிறப்பு. கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, மிரட்டலான நடிப்பினை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்தினை நன்கு உணர்ந்து, நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். படப் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறார். உஷா பண்டாரியும் தனது இயல்பான, மிகைப்படுத்தாத நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார்.

இயக்குநர் தேவிபிரசாத் ஷெட்டி, ’சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18’ மற்றும் ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக, ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திக் திக் மன நிலையுடன் ரசிகர்களை இருக்கையில் அமர வைத்தது தான் இந்தப்படத்தின் வெற்றி.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், நடிகர்களின் பங்களிப்பும் படத்தில் காணப்படும் பல குறைகளை மறையச் செய்துவிடுகிறது. படத்தின் பலமாக ஒளிப்பதிவாளர் ஹேமந்தின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. அதே போல்நவநீத் ஷாமி இசையும் அமைந்துள்ளது. படத்தின் பெரிய மைனஸ்.  கொலைகளுக்கான காரணம்! மற்றபடி, இது படபடப்புடன் ரசிக்க வைக்கும் கரைம் த்ரில்லர் திரைப்படம்.