‘சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ், தயாரித்துள்ள படம், சேவகர். சுனில் குமார் பி ஜி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் சந்தோஷ் கோபிநாத்.
‘சேவகர்’படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர்.
இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு.
நாயகன் பிரஜின் தன் ஊரில் நடக்கு அநியாயங்களை தட்டிகேட்பதுடன் மக்களுக்கு தேவையான உதவிகளையும், தனது நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறார். இந்நிலையில், அரசியல்வாதியான ‘ஆடுகளம்’ நரேன், மக்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டியவற்றை கிடைக்கவிடாமல் செய்வதோடு, பெரும் பணக்காரர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறார். இதை தட்டிகேட்கும் பிரஜினுக்கும் நரேனுக்கும் பகை உருவாகிறது. அரசியல்வாதி நரேன் செய்த ஊழல்களின் ஆதரங்கள் அடங்கிய ஒரு பென் ட்ரைவ், பிரஜினுக்கு கிடைக்கிறது. அதை கைப்பற்றுவதற்காக பிரஜின் சகோதரியை சிறைபிடிக்கிறார்கள். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான் சேவகர் படத்தின் கதை.
படத்தில் நடித்த பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும், அவரவர் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.
அரசியல்வாதியாக, ஆடுகளம் நரேன் வழக்கம்போல் நடித்திருக்கிறார். பிஅரஜின் அத்தை பெண்ணை காதலிப்பவராகவும், அநியாத்தை தட்டி கேட்கும் சமயங்களில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார்.
போஸ் வெங்கட் , நியாயத்தின் பக்கம் நிற்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் கோபிநாத், எதை நோக்கி செல்வது என தெரியாமல் நகரும் திரைக்கதை, சுவாரசியமற்ற காட்சியமைப்பு, இவைகளை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆர் டி மோகன் மோகன் இசையில் ‘காலை நேரம்’ பாடல், பரவாயில்லை கேட்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரதீப் நாயர், ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்யும் சேவர்களாக இருக்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் படமாக ‘சேவகர்’ அமைந்திருக்கிறது