தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் தற்போது, கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதுடன், ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
ஓவிய துறையின் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்.
ஷாம்லி வரைந்த ஓவியங்களை, பெங்களூரூவிலுள்ள ‘சித்ரகலா பரிஷத்’ எனும் கலைக்கூடத்தில் 2019 ஆம் ஆண்டிலும், சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடத்தில் 2022 ஆம் ஆண்டிலும் கண்காட்சியாக இடம் பெற வைத்திருக்கிறார்.
மேலும், துபாயில் உள்ள ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் அறுபது நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
சர்வதேச பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடிய துபாய் உலக வர்த்தக மையத்தில் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நான்கு நாள் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற இவரது படைப்புகளை பார்வையிட்ட பார்வையாளர்கள், இவரின் திறமையை வியந்து பாராட்டியதுடன், தங்களுடைய எண்ணங்களை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.