நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘இஃக்லூ’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பரத் மோகன் ’மெஜந்தா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். ‘மெஜந்தா’ படத்தை பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி. லீலாராம், ராஜு, சரவணன் பா, ரேகா லீ தயாரித்திருக்க, நவீன்ராஜா இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, பக்ஸ், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர்யா பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பல்லூ மேற்கொள்ள, படத்தொகுப்பை பவித்ரன் கே செய்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் கருந்தமலை பணியாற்றியுள்ளார்.