‘ஷாட் பூட் த்ரீ’ பெட் லவ்வர்ஸ் பார்க்க வேண்டிய திரைப்படம்! – மேனகா காந்தி.

யுனிவர்ஸ் க்ரியேஷன்ஸ் சார்பாக அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘ஷாட் பூட் த்ரீ’. இதில் வெங்கட்பிரபு சினேகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், சில முக்கிய பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டது.

ஷாட் பூட் த்ரீ, திரைப்படத்தினை பார்த்த விலங்குகள் நல ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மேனகா சஞ்சய் காந்தி தனது கருத்தினை தெரிவித்ததாவது…

‘ஷாட் பூட் த்ரீ’ ஒரு மிகச் சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்.  இத்திரைப்படத்தைக் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும்.

ஷாட் பூட் த்ரீ’ திரைப்படம் பலமொழிகளில் வெளியிடப்பட்டால், எல்லைகளைக் கடந்து அனைத்து மொழி மக்களும் இத்திரைப்படத்தைக் கண்டுகளிக்கலாம். திரையரங்குகளுக்குப் பிறகு OTT தளங்களில் வெளிவரும் சமயம் இத்திரைப்படம் இன்னும் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் என்று உறுதியாக நம்புகின்றேன். என்று தனது கருத்தினை, மேனகா சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

ஷாட் பூட் த்ரீ’ திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன் கூறியதாவது..

மேனகா சஞ்சய் காந்தியிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, இளம் பார்வையாளர்களிடம் இந்தப் படத்தை பெருமளவு கொண்டு செல்ல உதவும்.

ஒரு நாயின் மீது அதீத பாசம்கொண்ட ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது “ஷாட் பூட் த்ரீ”.  கதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், இது அனைவரின் இதயத்தையும் வருடி, அன்பு, பச்சாதாபம் மற்றும் விலங்குகள் பராமரிப்பின் முக்கியத்துவம் போன்ற அம்சங்களை எடுத்துகாட்டுவதால், அவற்றை எடுத்துக் கூறும் பெற்றோர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

ஷாட் பூட் த்ரீ’ திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்காக, யூனிட் ஹெட், பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், ஹேமா கல்யாணசுந்தரம் அவர்களுக்கும், இணை நிறுவனர் மற்றும் தலைவர், புளூ கிராஸ் ஆஃப் இந்தியா திரு.S. சின்னிகிருஷ்ணா ஆகியோருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்றார்.