‘சிலம்பாட்டம்’ திரைப்படம் மறுவெளியீடு. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிலம்பரசன் (STR) பிறந்தநாளைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிலம்பாட்டம்’ திரைப்படத்தை பிப்ரவரி 6ஆம் தேதி, எல்மா பிக்சர்ஸ் நிறுவனம்  மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

சிலம்பாட்டம் திரைப்படத்தில், STR, “தமிழரசன்” மற்றும் “விச்சு” என இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. கிராமத்து பின்னணியில் சிலம்பக் கலையை மையமாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், அவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மாஸ் ஆக்‌ஷன், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது, குறிப்பிடதக்கது.

மீண்டும் திரையரங்குகளில் சிலம்பாட்டம் வெளியாவது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கூறியதாவது..,

இயக்குநர் சரவணன் பேசியதாவது..,

”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்  இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.”

இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது..,

என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.

அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல  இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை.  தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி.  என்றார்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’, நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. காலப்போக்கில், STR-யின் கல்ட் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியது. இப்போது, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவில் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.