‘சைலண்ட்’ –  விமர்சனம்!

‘SR Dream Studios’ சார்பில்,  S.ராம் பிரகாஷ் தயாரித்து, இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கியிருக்கும் படம், சைலண்ட். திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார், சமயமுரளி. இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் வெளியாகியிருக்கும் சைலண்ட், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்குமா? பார்க்கலாம்.

படம் ஆரம்பித்த உடனேயே, ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை குறித்து போலீஸ் விசாரணை செய்யும்போது, அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. இந்தக் கொலைகளுக்கு காரணமான ஒரு பெண்ணை போலீஸார் நெருங்கும் போது, மேலும் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருகின்றன. அந்த விஷயங்கள் என்ன? கொலைகளை செய்தது யார், ஏன்? என்பது தான் சைலண்ட்!

முதல் படத்திலேயே இயக்குநர் கணேஷா பாண்டி, ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை வைத்து, திருநங்கைகள் குறித்து அழுத்தமாக பேசியிருக்கிறார். அதற்கு அவரை பெரிதும் பாராட்டலாம். டிஜிட்டல் உலகம் பல சாதனைகளை படைத்து வந்தாலும், திருநங்கைகள் மீதான பார்வை எப்படி இருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். பல குறைகள் இருந்தாலும், சில சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்கிறது.

திரைக்கதை எழுதி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சமய முரளி. குறைசொல்ல எதுவும் இல்லை.

ஆணாகவும், பெண்ணாகவும் நடித்திருக்கிறார், இயக்குநர் கணேஷா பாண்டி. சில இடங்களில் ஓவர் ஆக்டிங். மற்றபடி குறை சொல்ல முடியாத நடிப்பு.

இவர்களைத் தவிர, ‘மதியழகன்’ பட நாயகி ஆரத்யா, ‘தொப்பி’ படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், ‘பிக்பாஸ்’ நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.

கதைக்கேற்ற பட்ஜெட் இல்லை என்பது காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. திரைக்கதை அமைப்பு பாராட்டும்படி இருக்கிறது.

படத்தில் பெரிதும் கவனம் ஈர்ப்பது, இசை. சமய முரளி இசையமைத்துள்ளார். நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளை மெம்ம்படுத்துகிறது.

சேயோன் முரளி  ஒளிப்பதிவும் ஓகே.

மொத்தத்தில், ‘சைலண்ட்’ பட்ஜெட்டில் மட்டுமே குறை.