ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி (மாதுரி ) கதாநாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்துருகி பாடுவதாக வரும் பாடல் இது. முதல் இரண்டு பாடல்கள் போலவே, இப்பாடலும் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வருகிறது.
முதன்மை பாத்திரத்தில் நடிப்பது மற்றும் இசையமைப்பதோடு, ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை இயக்கவும் செய்துள்ளார். அருண்ராஜா DF. Tech (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), , Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.
TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில் ஹிஃபாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து சிவக்குமார் சபதம் படத்தை தயாரித்துள்ளனர்.