‘சொட்ட சொட்ட நனையுது’ –  விமர்சனம்!

இளம் வயதிலேயே வழுக்கைத் தலையுடன் இருக்கும், நாயகன் நிஷாந்த் ரூஷோவை திருமணம் செய்து கொள்ள பல பெண்களும் மறுக்கின்றனர். இந்நிலையில், நிஷாந்த் ரூஷோவின் அருகில் வசிக்கும் பெண் ஷாலினி, அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இதனால், இரு வீட்டினரும் கல்யாணத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்கின்றனர். இந்நிலையில், நிஷாந்த் ரூஷோ கலயாணத்தை நிறுத்துகிறார். அதற்கான காரணத்தினையும் யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். வழுக்கைத்தலையில் முடி வளரச்செய்வதற்கு சிகிச்சைக்காக சென்னைக்கு செல்கிறார். முடியுடன் ஊருக்கு திரும்புவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு கடைசி தருணத்தில், மணப்பெண்ணால் கல்யாணம் நிறுத்தப்படுகிறது! இதன்பிறகு என்ன நடந்தது? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘சொட்ட சொட்ட நனையுது’.

‘சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தினில், வழுக்கைத்தலையுடன் பெரும்பான்மையான காட்சிகளில், நாயகனாக நடித்த நாயகன் நிஷாந்த் ரூஷோவை பாராட்டியே ஆக வேண்டும். மற்றவர்கள் நடிக்கத்தயங்கும் கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்ததுடன், சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷிணி, ஷாலினி இருவருமே கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர். இவர்களுடன்

ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர். இவர்களை வைத்து இன்னும் காமெடிக்காட்சிகளை உருவாக்கியிருக்கலாம்.

இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத், வழுக்கைத் தலையால் பாதிக்கப்படும் இளைஞர்கள் எத்தகைய வலியை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக கல்யாண வயதில் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். ஆனால், அழுத்தமாக சொல்லவில்லை.

இசையமைப்பாளர் ரெஞ்சித், ஒளிப்பதிவாளர் ரயீஷ் இருவரின் பங்கும் குறிப்பிடும்படி இருக்கிறது.

மொத்தத்தில், ‘சொட்ட சொட்ட நனையுது’ குறைகள் பெரிதும் இல்லாத, ஒரு ஆவேராஜான படமாக இருக்கிறது.