ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் ஶ்ரீகாந்த்.அதன்பிறகு உடனிருந்தவர்களின் தொடர்ச்சியான தவறான வழிகட்டுதலின் மூலம் இன்னும் புகழின் வெளிச்சம் படாமலேயே இருந்து வருபவர்.
அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ‘எக்கோ” என்ற படத்தில் ஶ்ரீகாந்த், வித்யா பிரதீப் ஜோடியாக நடித்து வருகிறார். இவருடன் தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்து போய்விட்ட வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியும், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.