காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. அதன் பிறகு, நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுனைனா நடித்த ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரின் பாராட்டுகளையும் அவர் பெற்றார்.
சமீபத்தில் சுனைனா நடித்த ‘ டிரிப்’ திரைப்படம் தமிழில் வெளியானது. ஆனால் எதிபார்த்த வெற்றியை அது பெறவில்லை.
தமிழில் படங்கள் இல்லாததால் தற்போது அவர், ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுனைனா திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கபோவதாக செய்திகள் வெளிவந்தன .
இது குறித்து அவர் கூறியதாவது…
” கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது எனக்கு உற்சாகம் அளிக்கிறது”.
நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகள் தவறானது. எனக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை. திரை வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். என்றார்.