‘சிறுத்தை’சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில்,  நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 42 வது படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில், நட்சத்திர  ஹோட்டல் ‘செட்’  அமைக்கப்பட்டு, அங்கு  பூஜையுடன்  துவங்கியது! இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘Studio Green’  நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. ‘Studio Green’  நிறுவனத்தின்  தயாரிப்பாளார் K.E.  ஞானவேல்ராஜா, UV Creations வம்சி – பிரமோத்  உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி சங்கர் திரைக்கதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.  ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது..