சூர்யாவின் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் ஆகஸ்டில் வெளியாகிறது.

இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஆந்தாலஜி படம் ‘நவரசா’.

ஒன்பது பாகம் கொண்ட “நவரசா”  ஆந்தாலாஜி திரைப்படம் Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர். இவர்கள், திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் பணிபுரிந்துள்ளார்கள். என்பது குறிப்பிடதக்கது.

‘நவரசா’ ஆந்தாலஜி படைப்பு குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது..,

ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்து சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான்  மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம்.

சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. திரைதுறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்தது தான் “நவரசா” ஆந்தாலஜி படைப்பு.

இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களிடம் எடுத்து சொல்லியபோது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள். இந்த ஒன்பது படங்களும் மிகப்பெரும் முன்னணி ஆளுமை நிறைந்த குழுக்களுடன், மிக கடினமான சிக்கலான நோய்தொற்று காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய் தாக்காதவாறு அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு முழுப்பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது படம் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் 12,000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொதுமுடக்கத்தில் ஆதரவை தந்துள்ளது.

திரைத்துறை முழுதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் Bhoomika Trust மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்த திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக Netflix நிறுவனத்திற்கு நன்றி. என கூறியுள்ளனர்.

“நவரசா”  ஆந்தாலாஜி திரைப்படத்தின் விபரங்கள் :

தயாரிப்பாளர்கள்  – மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

  1. தலைப்பு – எதிரி (கருணை)

இயக்குநர் – பெஜோய் நம்பியார்

நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

 

  1. தலைப்பு – சம்மர் ஆஃப்  92 ( நகைச்சுவை )

இயக்குநர் – ப்ரியதர்ஷன்

நடிகர்கள் – யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

 

  1. தலைப்பு -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)

இயக்குநர் – கார்த்திக் நரேன்

நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

 

  1. தலைப்பு – பாயாசம் ( அருவருப்பு )

இயக்குநர் – வசந்த் S  சாய்

நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

 

  1. தலைப்பு – அமைதி ( அமைதி )

இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

 

  1. தலைப்பு – ரௌத்திரம் ( கோபம் )

இயக்குநர் – அர்விந்த் சுவாமி

நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

 

  1. தலைப்பு – இண்மை ( பயம் )

இயக்குநர் – ரதீந்திரன் R பிரசாத்

நடிகர்கள் – சித்தார்த், பார்வதி  திருவோர்து

 

  1. தலைப்பு – துணிந்த பின் (தைரியம்)

இயக்குநர் – சர்ஜூன்

நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்

 

  1. தலைப்பு – கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )

இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்