காப்பான், என்.ஜி.கே என வரிசையாக தோல்வியை தழுவிய சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள படம்., சூரரைப் போற்று. இந்தப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ள இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் ரிலீஸூக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் ஹரியுடன் சூர்யா 6 வது முறையாக இணையும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அருவா என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தினை ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டி.இமான் இசையமைக்கிறார்.
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. அருவா படத்தினை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.