நடிகர் விதார்த் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டத்தினை சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார்.
மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மறைந்த பிரபல எழுத்தாளரும், சினிமா வசனகர்த்தாவுமான பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா பாலகுமாரன் ‘பயணிகள் கவனிக்கவும்’ வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..
‘மறைந்த எழுத்தாளரும், சினிமா வசனகர்த்தாவுமான திரு. பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா பாலகுமாரன் பணிவன்புடன் எழுதிக்கொள்வது. அப்பா பாலகுமாரன் எழுதிய “பயணிகள் கவனிக்கவும்” என்கிற நாவல் மிகவும் புகழ் பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்து, அன்று முதல் இன்று வரை 10க்கு மேற்பட்ட பதிப்புக்களை ஏற்படுதிக்கொண்டிருக்கிற ஒரு உன்னதமான படைப்பு.
சில நாட்களுக்கு முன்பு அதே பெயரில் ஒரு திரைப்படத்தின் பெயர் போஸ்டராக வெளிவந்ததைக் கண்டு நானும் எங்களது குடும்பத்தாரும் கவலைக்குள்ளானோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, மக்கள் தொடர்பாளரோ எங்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கவோ, அனுமதி கேட்கவோ இல்லை. இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு எங்கள் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான திரு விஜயன் சுப்ரமண்யம் அவர்கள் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம். இதை தங்களின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது என்னுடைய மற்றும் என் குடும்பத்தாருடைய விருப்பம்.
நன்றி
என்றென்றும் அன்புடன் , சூர்யா பாலகுமாரன், 9840945845
வழக்கறிஞர். திரு. விஜயன் சுப்ரமண்யம்
Absolute Legal – Law firm, Kilpauk
9841320723