மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிஸியாக நடித்துவரும் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தி நடித்த ‘கொம்பன்’ படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா மீண்டும் கார்த்தியை இயக்குகிறார்.
இந்தப்படத்தினை சூர்யாவின் பட நிறுவனமான ‘ 2டி என்டர்டெயின்மென்ட்’ தயாரிக்கவுள்ளது. இதில் ‘சூரரை போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அபர்னா பாலமுரளி கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
கார்த்திக்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்த ‘கொம்பன்’ படத்தை போன்றே இந்தப்படமும் கிராமத்து கதையம்சம் கொண்டபடமாக இருக்கும் என்கின்றனர்.
முன்னதாக கார்த்தி நடித்துவரும் ‘சர்தார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படமும், இயக்குனர் முத்தையாவின் படமும் வெளியான பின்னரே ‘சர்தார்’ படம் வெளியாகும் என தெரிகிறது.