விவேக் மரணம். திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட, நடிகர் விவேக்.

நேற்று ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரது மகளும் மனைவியும் சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சுயநினவின்றி இருந்த அவருக்கு  உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை செய்யபட்டதுடன் தொடர்ந்து, எக்மோ சிகிச்சை மூலம் சுவாசம் அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் நடிகர் விவேக் இன்று ஏப்ரல் 17, சனிக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

நடிகர் விவேக்கின் உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு துறையினை சார்ந்த பலரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..