திரை பிரபலங்கள் வெளியிட்ட பாடல் ‘இவளைப் போல’!

‘காமன் மேன் மீடியா’ சதீஷ் ஏராளமான திரைப்படங்களுக்கு ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வருபவர் .  இவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும்  பணியாற்றி இருக்கிறார் .  இவரது முதல் குறும்படம் சர்வதேச கவனம் பெற்றதுடன் 25 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் தற்போது  ‘இவளைப் போல ‘ எனும் தலைப்பில்  பாடலை  உருவாக்கியுள்ளார். ஐந்து பேரை மட்டுமே  கொண்ட படக்குழு  ஒரே நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள அக்க்ஷிதா ரவீந்திரன் பாடலுக்கான நடனத்தை அவரே அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சிவராஜ் கேமராவுடன் ட்ரோன் கருவியையும் இயக்கி படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார் . பொறியாளன் படத்திற்கு இசையமைத்த ஜோன் தான் இதற்கும் இசையமைத்துள்ளார். ஜி.பி. ஸ்டுடியோ தயாரித்துள்ளது

இதனை தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி,  கலைப்புலி தாணு, ஜீ. வி .பிரகாஷ்குமார், நடிகர் விஷால், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இயக்குநர் கார்த்திக் ராஜு, சி.வி.குமார் ஆகியோர் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.