தமிழக காவல்துறையில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 2019-ம் ஆண்டிற்கான பொது தேர்வு அறிவிப்பு

தமிழக காவல்துறையில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 2019-ம் ஆண்டிற்கான பொது தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இரண்டாம்நிலை காவலர், சிறைத்துறை¸ தீயணைப்புத்துறை பணிக்கான காலியாக உள்ள 8826 பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கான தேர்விற்கு தகுதியுள்ள ஆண்¸ பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தினர்களிடமிருந்து கணினி வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஏனைய இதர விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலம் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய சந்தேகம் இருப்பின் தங்களது மாநகர காவல் ஆணையர் அலுவலகம் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் உள்ள உதவி மையத்தை அணுகி பயன்பெற்றுக் கொள்ளலாம்.

கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் – 08.04.2019

மேலும் விவரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் சென்று பயன்பெற்று கொள்ளுமாறு தமிழக காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது