ஆர்யா கதாநாயகனாகவும் ‘இயக்குனர்’ மகிழ் திருமேனி வில்லனாகவும் நடித்திருக்க, கொளரவ தோற்றத்தில் சாயீஷா நடித்திருக்கும் படத்தை இயக்கியிருக்கிறார், சக்தி செளந்தர் ராஜன்.
நெட்ஃப்ளிக்ஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் டெடி எப்படியிருக்கிறது?
‘போட்டோகிராபிக் மெமரி’ எனப்படும் அதீத நினைவாற்றல் திறன் கொண்டவர் ஆர்யா. நொடிகளில் நடக்கும் விஷயங்களை எளிதாக மனதினில் பதிவுசெய்து கொள்வார்.
மனித உடல் உள்ளுறுப்பகளை திருடி விற்பனை செய்யும் டாக்டர். மகிழ்திருமேனி. செயற்கையான விபத்து ஏற்படுத்தி சாயீஷாவை கடத்துகிறார்.
செயற்கையாக கோமா நிலைக்கு தள்ளப்படும் சாயீஷாவின் ஆன்மா ஒரு கரடி பொம்மைக்குள் (டெடி) சென்றுவிடுகிறது.
அதன்பிறகு செய்வதறியாது தினறும் சாயீஷா, ஆர்யாவின் உதவியை நாடுகிறார்.
ஆர்யா என்ன உதவி செய்தார்? சாயீஷா என்ன ஆனார்? என்பதை விறு விறுப்போ, சுறு சுறுப்போ இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதையும், க்ளைமாக்ஸும் தான் ‘டெடி’
ஆர்யா எப்போதும் ஏன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்கிறார்? என தெரியவில்லை. படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் தலை காட்டுகிறார், சாயீஷா.
சதீஷ், கருணாகரன் இருவரும் காமெடி செய்து படம் பார்ப்பவர்களை கொல்கிறார்கள்.
வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி. அவரது கதாபாத்திரம் ஈர்க்கவில்லை.
இமான் இசையில், கார்க்கி எழுதிய ‘எந்தன் நண்பியே நண்பியே.. எனைத் திறக்கும் அன்பியே..’ பாடல் திரும்பத் திரும்ப பார்க்கவும், கேட்கவும் தோன்றும். பின்னணி இசை சுமார்.
யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், ‘டெடி’யை வைத்துக்கொண்டு சிறுவர்களுக்கான படமாக இல்லாமலும், பெரியவர்களுக்குமான படமாக இல்லாமலும் ஒரு மாதிரியாக முடித்துள்ளார்.
கதைக்கு தேவையற்ற, வீனான பட்ஜெட்டில் ‘டெடி’