இருட்டு படம் பிடித்ததால், ‘தலைநகரம் 2’ படத்தில் நடித்தேன்! – சுந்தர் சி.

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம், தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள, இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், கலந்து கொண்ட நடிகர் சுந்தர் சி பேசியதாவது…

ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் இந்த டைட்டிலை பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2 ஆம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் ‘இருட்டு’ படம் மிக அருமையான திரைக்கதை கொண்டது. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை. அதற்கு அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர். அவருக்குப்பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன் நன்றி.

‘தலைநகரம் 2’ படத்தின் இயக்குநர் V Z துரை பேசியதாவது…

நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை, என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், சக்கரவர்த்தி சார். அவருக்கு நன்றி. சக்கரவர்த்தி சார், பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் தயாரிப்பாளர், என் தம்பி பிரபாகர். என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி. சுந்தர் சி சார் தான் எனக்கு ஆசிரியர், பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன், அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார்.  இந்த படத்தின் 30 நிமிட காட்சிகளை பார்த்த உடனே, ஹிந்தி ரைட்ஸ் உரிமையை வாங்கிவிட்டார்கள். ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படமாக ‘தலைநகரம் 2’ இருக்கும். என்றார்.