மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய கோவை காவல் துறையினர்

The Coimbatore police have celebrated Deepavali with the tribal people

கோவை மாவட்டம் காரமடை அருகே மானார் ஆதிவாசி கிராமத்தில் கோவை மாவட்ட காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு ஆகியோர் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 04.11.2018-ம் தேதியன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா இ.கா.ப அவர்கள் தலைமையில் காவல்துறை துணை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் 1000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வைகள், இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆதிவாசி மக்களுடன் இணைந்து காவல்துறையினர் தீபாவளியைக் கொண்டாடினர்.

பின்பு பேசிய காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா அவர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்