‘நானே வருவேன்’ பட, டீஸர் உருவாக்கிய பெரும் எதிர்பார்ப்பு!

கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான Vகிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு , வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’.  இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர், நேற்று மாலை மணிக்கு  வெளியாகியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்டாட்டத்துடன் மிகப் பிரமாண்டமாக ‘ரோகிணி’ திரையரங்க  வளாகத்தில் LED திரையில் பிரத்தியேகமாக காட்சியிடபட்டது. அப்போது ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.